யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 03 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் கூடுதல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், மேல்முறையீடு செய்ய சவுக்கு சங்கருக்கு 30 நாள்கள் அவகாசம் வழங்கி நீதித்துறை நடுவர் சிவசக்தி உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும் வழக்குரைஞருமான மகாலட்சுமி, தன்னைப்பற்றி அவதூறான கருத்துகளை தனது 'சவுக்கு' இணையதளத்தில் வெளியிட்டதாகக் கூறி சவுக்கு சங்கர் மீது கடந்த 2013-இல் முதன்முதலில் புகார் அளித்தார்.

அத்துடன், தொடர்ச்சியாக தன்னை மிரட்டியதாகவும் போலி ஆவணங்களைத் தயாரித்ததாகவும் சவுக்கு சங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மகாலட்சுமி வழக்குத் தொடர்ந்தார்.

குறித்த வழக்கில் மகாலட்சுமி தரப்பில், சவுக்கு சங்கர் திட்டமிட்டு தன் மீது அவதூறு பரப்புவதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிடப்பட்டது. அதேநேரம், சவுக்கு சங்கர் தரப்பில், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் முற்றிலும் பொய்யானவை என்று வாதிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவசக்தி, பெண்களை துன்புறுத்தல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 03 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் சவுக்கு சங்கர் தரப்பில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Egmore Court orders 3 year prison sentence for YouTuber Savukku Shankar


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->