தாராபுரம் இடைத்தேர்தல்; முதல்வர் விஜய் நாளை கோவை விஜயம்; பாதுகாப்பு தீவிரம்..! - Seithipunal
Seithipunal


தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக, முதல்வர் விஜய் நாளை (செப்.30) கோவை செல்லவுள்ள நிலையில் அங்கு பாதுகாப்புக்காக 1,938 போலீஸாா் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்லும் முதல்வர், தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செல்கிறார். முதல்வர் வருகையையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

விமான நிலையத்தின் வெளியேறும் பகுதியில் இருந்து அவிநாசி சாலை விமான நிலைய பிரிவு வரை, கட்சி தொண்டர்கள் திரண்டு பாதுகாப்பாக வரவேற்பு அளிக்கும் வகையில் சாலையின் இருபுறமும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், விமான நிலையம், வெளியே வரும் பாதை, அவிநாசி சாலை, கோவை மாவட்ட எல்லை வரை, கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீஸாரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மாநகரப் பகுதியில் காவல் ஆணையர் (பொறுப்பு) ரம்யா பாரதியின் தலைமையின் கீழ் 1,438 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், புறநகரப் பகுதியில் காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி தலைமையின் கீழ் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட நிர்வாகத்தினர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதவது;

''முதல்வர் வருகையையொட்டி, கோவையில் முன்னரே அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைத்த கரியாம்பாளையம் சந்திப்பு, நீலாம்பூர் புறக்காவல் நிலையம், கணியூர் சுங்கச்சாவடி, கருமத்தம்பட்டி நால்ரோடு, சோமனூர் பவர்ஹவுஸ், சோமனூர் நொய்யல் ஆற்றுப்பாலம் (திருப்பூர் மாவட்ட எல்லை), கோவை மாநகர காவல் ஆணையர் பரிந்துரைத்த கொடிசியா, பீளமேடு, சிட்ரா, நேருநகர், இருகூர், எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி, ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், ஹோப்காலேஜ், சின்னியம்பாளையம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகியவை தற்காலிக சிவப்பு மணடலப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு்ள்ளது.

இன்று முதல் அக்டோபர் 1-ம் தேதி அதிகாலை 1 மணி வரை, ஆளில்லாத விமானங்கள் இயக்குவதற்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு, ஆளில்லாத விமானங்கள் (ட்ரோன்கள்) பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.'' எனக் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Security tightened ahead of Chief Minister Vijays visit to Coimbatore tomorrow


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->