ஆசிய விளையாட்டில் ஹாட்ரிக் பதக்கங்கள் வென்றுள்ள இந்திய ராணுவ வீரர் குல்வீர் சிங் மற்றும் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்..! - Seithipunal
Seithipunal


ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 (Aichi-Nagoya Asian Games 2026), ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய தடகள வீரரும் ராணுவ வீரருமான குல்வீர் சிங் (28 வயது) மூன்று பதக்கம் (ஹாட்ரிக்) வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

தடகள வீரர் குல்வீர் சிங் இந்திய ராணுவத்தில் சுபேதாரராகப் பணியாற்றி வருகிறார்.தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 5,000 மீட்டர் தடகளத்தில் பந்தய தூரத்தை 13 நிமிஷங்கள் 32.75 விநாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார்.

இந்தப் பிரிவில் பஹ்ரைன் வீரர் 13 நிமிஷங்கள் 30.79 விநாடிகளில் கடந்து தங்கமும், ஜப்பான் வீரர் 13 நிமிஷங்கள் 31.43 விநாடிகளில் கடந்து வெள்ளியும் வென்றுள்ளார்கள்.

அடுத்து, 10,000 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் தடகளத்தில் குல்வீர் சிங் வெள்ளி வென்றதோடு, தற்போது, 5,000 மீட்டர் போட்டியிலும் பதக்கம் வென்று 'ஹாட்ரிக்' சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக இந்தியாவின் பிடி உஷா ஒரே ஆசிய விளையாட்டில் மூன்று பதக்கங்கள் வென்று சாதனை படைத்திருந்தார். இதற்கடுத்து இரண்டாவது இந்தியராக, ஆடவர் பிரிவில் முதல் இந்தியராகவும் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதுவரை ஆசிய விளையாட்டு 2026-இல் இந்தியாவுக்கு 49 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில், 05 தங்கம், 21 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. 

அதேநேரத்தில் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மொத்தம் 3 பதக்கங்களை (மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம், கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டம். மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டம்) முறையே  (1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம்) வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian Army soldier Gulveer Singh and TN athlete Vidya Ramraj who have won a hat trick of medals at the Asian Games


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->