''முதல்வர் விஜய்யிடம் இருந்து ஓர் அழைப்பு வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்''; ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற ஆன்சி சோஜன் பேட்டி.!
Ancy Sojan a silver medalist says in an interview that she would be happy to receive a call from CM Vijay
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் ஐச்சி மற்றும் நாகோயா (Aichi-Nagoya) நகரங்களில் 2026 செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை தற்போது மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
"Imagine One Asia'' என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்த 20-வது ஆசிய விளையாட்டுத் தொடரில், ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்தத் தொடரில் இந்தியா சார்பாக 495 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, இந்தியா 05 தங்கம், 21 வெள்ளி மற்றும் 24 வெண்கலம் என மொத்தம் 50 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 11-வது இடத்தில் நீடிக்கிறது.
நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை ஆன்சி சோஜன் தமிழக முதல்வர் ஜோசப் தீவிர ரசிகையாக இருப்பதுடன், விஜய் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
மகளிருக்கான நீளம் தாண்டுதலில் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஆன்சி சோஜன், 6.53 மீட்டருக்கு தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் வெறுமனே 02 சென்டி மீட்டர் வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை இழந்துள்ளார்.
கேரளத்தைச் சேர்ந்த 25 வயதான ஆன்சி சோஜன் இந்திய கடற்படையில் பணியாற்றி வருகிறார். இவர் ஆசிய விளையாட்டில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில், விஜய்யின் ரசிகையான இவர் நேர்காணல் ஒன்றில் விஜய் திரைப்படத்தின் காட்சியை அவர் தமிழில் பேசிக்காட்டி இருந்தார். அத்துடன் விஜய் குறித்து அவர் கூறியுள்ளதாவது,
''முதல்வர் விஜய்யிடம் இருந்து அழைப்பு வரவேண்டுமென விரும்புகிறேன். அவரது உத்வேகம் தரும் பேச்சுகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்போதைக்கு இது மட்டுமே சொல்ல விரும்புகிறேன். அவரிடம் இருந்து ஓர் அழைப்பு வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக டெல்லியில், இந்திய நேஷ்னல் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆன்சி சோஜன் வென்ற பதக்கம் வென்ற போது முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் செய்த சைகையை செய்து கவனம் பெற்றார்.
English Summary
Ancy Sojan a silver medalist says in an interview that she would be happy to receive a call from CM Vijay