தவெகவுக்கு 'அல்ப ஆயுசு' ; தமிழக முதல்வர் விஜய் நம்பக் கூடாதவர்களை நம்பி ஆட்சி அமைத்துள்ளார்; ஹெச்.ராஜா..!
Tamil Nadu CM Vijay has formed a government by trusting those who should not be trusted says H Raja
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு பிறந்த நாள் விழா நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா கூறியதாவது;
இந்தியாவை 2047-க்குள் முன்னேறிய நாடாக மாற்றுவோம் என பிரதமர் தெரிவித்துள்ளார். அது குறித்து அக்டோர் 17-ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழகத்தில் தினமும் மின்வெட்டு ஏற்படுகிறதாகவும், தவெகவின் 100 நாட்கள் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதனால் மக்களிடம், அரசே இல்லையோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது அந்த அச்சத்தை தவெக அரசு போக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவரானது மிகப் பெரிய துரதிர்ஷ்டம் என்றும், அவர் இந்தியர் கிடையாது. செமி இந்தியர் என்று குறிப்பிட்டுள்ளதோடு, எதிர்க்கட்சியினர் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ப.சிதம்பரம் உண்மை பேசியதே கிடையாது என்றும், கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, மோடி ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத் திட்டம் இருக்காது என்று பிரச்சாரம் செய்தார். ஆனால், 12 ஆண்டுகளாக அத்திட்டம் தொடர்கிறது என்றும், தனது மகனுக்கு வாக்கு வாங்குவதற்காக பொய் சொன்ன பிறவி பொய்யர் அவர், நேர்மையற்ற மனிதர், கலகக்காரர் என்று கூறியுள்ளார்.
அத்துடன், தமிழக முதல்வர் விஜய் நம்பக் கூடாதவர்களை நம்பி ஆட்சி அமைத்துள்ளார். இடைத்தேர்தலில் தவெக தோற்றதும், ஆட்சிக்கான ஆதரவை கம்யூனிஸ்ட்டுகள், விசிகவினர் விலக்கிக்கொள்வர் என்றும், தவெகவுக்கு 'அல்ப ஆயுசு' ஆட்சிதான் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தவெக ஆட்சியை ஆதரிக்கிறோம் என்று கூறி பலனை அனுபவித்துவிட்டு, இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் தனித்து நிற்கிறது என்றும், அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டுத்தான், தனித்து நின்றிருக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு டெபாசிட்கூட கிடைக்காது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கடந்த 2004-ஆம் ஆண்டிலிருந்தே வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தோரின் பெயரை நீக்கவில்லை என்றும், அதற்காகத்தான் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் கொண்டுவந்தது. ஆணையம் நேர்மையாகத்தான் செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Tamil Nadu CM Vijay has formed a government by trusting those who should not be trusted says H Raja