நடிகை சமந்தாவின் 'டீப்பேக்' ஆபாச பதிவுகளை உடனடியாக நீக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


நடிகை சமந்தாவின் உருவம் மற்றும் குரலை அனுமதியின்றி பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு முறையில் சித்தரித்து வெளியிடப்பட்ட போலி வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

சமந்தாவின் பெயர் மற்றும் புகைப்படங்களையும் அனுமதியின்றிப் பயன்படுத்தி இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் அவரது உருவத்தைப் போன்ற ஆபாச டீப்பேக் படங்கள், போலியான குரல் பதிவுகள் மற்றும் உருவத்தை இழிவுபடுத்தும் வகையிலான சாட்பாட்கள் உருவாக்கப்பட்டு விஷமிகளால் பரப்பப்பட்டு வருகிறது.

இவ்வாறான அத்துமீறிய செயல்கள் தனது நற்பெயருக்கும் பெண்களின் கண்ணியத்திற்கும் களங்கம் ஏற்படுத்துவதாக தனது தனிநபர் உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி நடிகை சமந்தா தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

குறித்த மனு நீதிபதி மாதவ் ஜாம்தார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ''தனிநபரின் சுதந்திரம், பேச்சுரிமை, தனியுரிமை மற்றும் மனித கண்ணியம் ஆகியவை அடிப்படை உரிமைகளுக்கு உட்பட்டவை. இணையதளங்களில் உள்ள இத்தகைய பதிவுகள் நடிகையின் உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாக உள்ளன''. என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். 

அதனைத்தொடர்ந்து, சமந்தாவின் அடையாளத்தைப் பயன்படுத்தி அனுமதியின்றி உருவாக்கப்பட்ட டீப்பேக் ஆபாச பதிவுகள் அனைத்தையும் உடனடியாக நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய பதிவுகளை வெளியிடவும் நீதிபதி இடைக்காலத் தடை விதித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mumbai High Court orders immediate removal of deepfake pornographic posts featuring actress Samantha


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->