பேரறிவாளன் பாஸ்போர்ட் கோரி மனு; அதிகாரிகள் விரைந்து முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


பேரறிவாளன் பாஸ்போர்ட் கோரி அளித்த விண்ணப்பத்தின் மீது விரைந்து முடிவெடுக்குமாறு பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளன், விடுதலைக்கு பின் சட்டப்படிப்பை முடித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.

அத்துடன், தனக்கு பாஸ்போர்ட் கோரி அவர், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தின் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால், தனது பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது விரைந்து முடிவெடுக்கக் கோரி, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கும், தாம்பரத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரத்துக்கும் மனு அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், குறித்த மனு பரிசீலிக்கப்படாததால், அதனை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் மீது விரைந்து முடிவெடுக்கக் கோரி பேரறிவாளன் அளித்த மனுவை பரிசீலிக்கும்படி, பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The High Court has ordered officials to make a speedy decision on Perarivalans application for a passport


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->