தலைமன்னார் to தனுஷ்கோடி; ராமர் பாலத்தை பார்வையிட படகு பயணம்; மன்னார் ஆட்சியர் கனகேஸ்வரன் அறிவிப்பு..!
Mannar District Collector Kanakeswaran announces the launch of a boat service to view Ram Setu
இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தமிழகத்தின் தனுஷ்கோடி வரை உள்ள (ராமர் பாலம்), இலங்கைக்கு சொந்தமான மணல் திட்டுகளில் அக்டோபர் 15 முதல் படகு சேவை தொடங்கப்படவுள்ளதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலான கடற்பகுதியில் 13 மணல் திட்டுகள் உள்ளன. இதில் தனுஷ்கோடியிலிருந்து முதல் 06 திட்டுகள் இந்தியாவிற்கும், 07-இல் இருந்து 13 வரையிலான திட்டுகள் இலங்கைக்கும் சொந்தமானவை.
இந்நிலையில், இலங்கையின சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் அந்நாட்டின் எல்லை பகுதிக்குள் உள்ள 07 முதல் 13-ஆம் மணல் திட்டுகள் வரை சுற்றுலாப் பயணிகளுக்கான படகு சேவையை இயக்குவதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டன. கடந்த வாரம் மணல் திட்டுக்களுக்கான (ராமர் பாலம்) முன்னோட்ட படகு சேவை தலைமன்னாரிலிருந்து நடைபெற்றது. இதில் இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், மன்னார் மாவட்ட ஆட்சியர் கனகேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இது குறித்து இலங்கையின் மன்னார் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் கனகேஸ்வரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது ஆட்சியர் கனகேஸ்வரன் கூறியதாவது;
வரும் அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி முதல் படகு சேவை தொடங்கப்படும். ஒரு படகில் ஏழு பேர் வரையிலும் பயணிக்கலாம் என்றும், இதற்காக ஒருவருக்கான கட்டணம் ரூ.2,500 (இந்திய மதிப்பு ரூ.725) ஆகும். மணல் தீட்டுகளுக்கு சென்று சுற்றுலாப் பயணிகள் சென்று நீச்சல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Mannar District Collector Kanakeswaran announces the launch of a boat service to view Ram Setu