இனி சனிக்கிழமைகளில் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படாது; தமிழ்நாடு அரசு அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


100 சார் பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்பட்டு வந்த நிலையில், இனி அவை சனிக்கிழமைகளில் செயல்படாது என தமிழ்நாடு அரசு . அறிவித்துள்ளது. சார் பதிவாளர்களின் வேலைப்பளுவைக் குறைக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிக பத்திரப் பதிவு நடைபெறும் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள், சனிக்கிழமையும் செயல்படும் என கடந்த திமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது. புதிதாக தவெக ஆட்சிக்கு வந்த பின்னர், வருகையில்லா ஆன்லைன் ஆவணப் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அது மேலும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை சார்பில் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை கட்டாய பணி என்ற நடைமுறையை கைவிடுவதாகவும், இதனால், சார் பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டுமே செயல்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சார் பதிவாளர்களின் வேலைப்பளுவைக் குறைக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் காலங்களில் அனைத்து ஆவணங்களையும் காகிதமில்லா முறையில் ஆன்லைன் வாயிலாக பதிவுசெய்ய உத்தேசித்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு மேலும் அறிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Government announces that 100 Sub Registrar offices will no longer function on Saturdays


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->