''தந்தையின் சட்டத்தை மதிக்காமல் மீறுவது சரியா?; அண்ணன் மு.க.ஸ்டாலின் இப்படி பேசி இருப்பது அதிர்ச்சி''; அமைச்சர் வன்னி அரசு..!
Minister Vanni Arasu describes MK Stalins remarks mocking someones physical appearance as shocking
தமிழகத்தில் தாராபுரம் இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் சுகன்யாவை ஆதரித்து இன்று பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட மு.க. ஸ்டாலின், ''இந்தத் தொகுதி தவெக வேட்பாளரை பெட்டி பாமா, பல்டி பாமா என சத்தியத்திற்கு விரோதமாக செயல்பட்ட அந்த வேட்பாளரை மக்கள் அழைக்கின்றனர்'' எனப் பேசி இருந்தார்.அத்துடன், தவெக வேட்பாளர் சத்யபாமாவின் உருவம் குறித்தும் பேசியிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
''உருவக்கேலி கூடாது என்று வழிகாட்டக்கூடிய தலைவரான மு.க. ஸ்டாலினே இப்படிப் பேசி இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.'' என அமைச்சர் வன்னியரசு குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, ஆணாதிக்கம் மிகுந்த சமூக கட்டமைப்பில் பெண்கள் பொது வாழ்க்கைக்கு வருவதே அரிது. அதுவும் தலித் பெண்கள் வருவது அதனினும் அரிது. அதை முடக்கும் வகையில், ஆணாதிக்க சமூகம் தமது அதிகாரத்தைப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம் என்று கருத்து கூறியுள்ளார்.
அதனால் தான் பெண்களை பொது இடங்களில் கேலி செய்தால் ஓராண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என 1998 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டது என்று சுட்டிக்காட்டினார்.
இந்தச் சட்டத்திற்கு 'தமிழ்நாடு பெண்களுக்குத் துன்பம் விளைவித்தலை தடை செய்கிற சட்டம்' எனப் பெயர் சூட்டப்பட்டது. இச்சட்டத்தை இயற்றியவர் யார் தெரியுமா? திமுக தலைவரும் திராவிட இயக்கத்தின் ஆளுமையுமான கலைஞர். தந்தையின் சட்டத்தை மதிக்காமல் மீறுவது சரியா?'' என தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
Minister Vanni Arasu describes MK Stalins remarks mocking someones physical appearance as shocking