நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போராட்டத்தில் வன்முறை; தேஜ் பிரதாப்பை 14 நாட்கள் சிறையில் அடைக்க பாட்னா நீதிமன்றம் உத்தரவு..!
Patna court orders Tej Pratap to be sent to jail for 14 days
பீகார் மாநிலம் பாட்னா காந்தி மைதானத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, ஜன்சக்தி ஜனதா தள கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜ் பிரதாப் யாதவ் போலீசார் கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று பாட்னானில் நடந்த போராட்டத்தின் போது, கல்வீச்சு மற்றும் போக்குவரத்து போலீஸ் பூத் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களை தொடர்ந்து, தேஜ் பிரதாப் நேற்றிரவு 07.30 மணிக்கு ஷாப்பிங் மாலில் இருந்த போது கைது செய்யப்பட்டார். ஆனால் , அவருக்கு எதிராக நேற்றிரவு தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எப்.ஐ.ஆர் நகல் கூட வழங்கப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் ஜெகன்னாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டதற்கு முன்பாக பேசிய தேஜ் பிரதாப், ''மாணவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. அரசு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், நாங்கள் அவர்களுடன் உறுதியாக நிற்கிறோம். மாணவர்களுக்காகவும் இளைஞர்களுக்காகவும் உயிரைக் கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன்'' என்று கூறியமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Patna court orders Tej Pratap to be sent to jail for 14 days