சிதம்பரம் அருகே பரபரப்பு; காதலுக்கு மறுப்பு; தனிமையில் இருந்த பிளஸ்-1 மாணவியின் கழுத்தை அறுத்த 28 வயது எலக்ட்ரீசியன்..!
A 28 year old electrician slit the throat of a Plus1 student who rejected his love near Chidambaram
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (28). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். அதேபகுதியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இன்று காலை அய்யப்பன், அந்த மாணவி வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலை பார்க்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு தனியாக இருந்த மாணவியிடம், தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்த நிலையில், மாணவியிடம் அத்துமீறி நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதனை சற்றும் எதிர்பாராத அந்த மாணவி கத்தி சத்தம் போட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த அய்யப்பன் சத்தம் போட்டால் அந்த மாணவியை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இருப்பினும் மாணவி தொடர்ந்து சத்தம் எழுப்பியதால், ஆத்திரம் அடைந்த அய்யப்பன் தான் கையில் வைத்திருந்த பிளேடை எடுத்து மாணவியின் கழுத்தை மறுத்துள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த மாணவி மீண்டும் சத்தம் போட்டதால், சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அவர்கள் வருவதை பார்த்ததும் அய்யப்பன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
கழுத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலைமுயற்சி சம்பவம் குறித்து சிதம்பரம் தாலுக்கா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
A 28 year old electrician slit the throat of a Plus1 student who rejected his love near Chidambaram