ஒரு படத்திற்கு 275 கோடி சம்பளம் வாங்கிய விஜய்!முதல்வராக விஜய் வாங்கும் சம்பளம் எவ்வளவு? – வெளியான தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் பெறும் சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. இதையடுத்து கடந்த மே 10ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.

திரையுலகில் மிக உயர்ந்த சம்பளம் பெற்ற நடிகர்களில் ஒருவராக இருந்த விஜய், அரசியலுக்காக சினிமாவை விட்டு வந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அவர் கடைசியாக நடித்த திரைப்படத்திற்காக ரூ.275 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது. இது தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய தொகைகளில் ஒன்றாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சராக விஜய் பெறும் சம்பளம் குறித்து பலரும் ஆர்வமாக பேசிவந்தனர். தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, தமிழக முதலமைச்சருக்கான அடிப்படை மாத சம்பளம் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் என கூறப்படுகிறது.

இதனுடன் அரசு வழங்கும் வீட்டு வசதி, பாதுகாப்பு, பயணச் சலுகைகள் மற்றும் பிற அலவன்ஸ்கள் சேர்த்து மாதத்திற்கு சுமார் ரூ.2.85 லட்சம் வரை கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, வருடத்திற்கு சுமார் ரூ.34.2 லட்சம் வருமானம் முதலமைச்சர் சம்பளமாக கிடைக்கும். இது விஜய் சினிமாவில் பெற்ற சம்பளத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானதாக இருந்தாலும், மக்கள் சேவைக்காக அவர் எடுத்துள்ள அரசியல் முடிவை அவரது ஆதரவாளர்கள் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay received a salary of 275 crores for a film How much salary does Vijay receive as the Chief Minister Information revealed


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->