நள்ளிரவில் பகீர்! மகளிர் விடுதிக்குள் சுவர் ஏறி குதித்த வாலிபர்...! - அலறியடித்த மாணவிகள், சிக்கியது எப்படி...?
thief middle night young man jumped up wall into women hostel screaming students how he caught
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிந்தாமணி (32), சென்னையில் கந்தன்சாவடி பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வரும் தனது தங்கையை சந்திப்பதற்காக சென்னை வந்திருந்தார். அவரது தங்கை அங்குள்ள மகளிர் விடுதியில் தங்கி வந்ததால், கடந்த 10ஆம் தேதி இரவு சிந்தாமணியும் அதே விடுதியில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில், அதிகாலை நேரத்தில் மர்ம நபர் ஒருவர் விடுதியின் சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே புகுந்து, சிந்தாமணி தங்கியிருந்த அறைக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறைக்குள் ஏற்பட்ட சத்தத்தால் திடீரென விழித்தெழுந்த சிந்தாமணி, அங்கு அடையாளம் தெரியாத ஆண் நபர் நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவர் கூச்சலிட்டதை அடுத்து, விடுதியில் தங்கி இருந்த பிற பெண்களும் அங்கு விரைந்து வந்தனர். இதனால் பதற்றமடைந்த அந்த நபர், கத்தியை காட்டி மிரட்டியபடி அங்கிருந்து தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து துரைப்பாக்கம் காவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கிய காவலர்கள், மகளிர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவைச் சேர்ந்த லட்சுமணன் (27) என்பவரை கைது செய்தனர்.
கொட்டிவாக்கம் பகுதியில் புரோட்டா தயாரிப்பாளராக பணியாற்றி வந்த லட்சுமணன் மீது, பெண்களுக்கு தொந்தரவு அளித்த குற்றச்சாட்டில் ஏற்கனவே இரண்டு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட லட்சுமணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
thief middle night young man jumped up wall into women hostel screaming students how he caught