குறுவை சாகுபடிக்கு ரெடியா...? மேட்டூர் அணை திறப்பு பற்றி முக்கிய முடிவு...! - முதல்வர் விஜய்
Kuruvai ready cultivation Important decision regarding opening Mettur dam Chief Minister Vijay
சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை மற்றும் நீர்வளத்துறை செயல்பாடுகள் தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இதில், விவசாயிகளின் தேவைகள், நீர்வள மேலாண்மை திட்டங்கள் மற்றும் குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள் குறித்து விரிவான கலந்தாய்வு நடைபெற்றது.

குறிப்பாக, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை வருகிற ஜூன் 12ஆம் தேதி திறப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டார்.
காவிரி நீர் இருப்பு நிலை, டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பரப்பளவு மற்றும் விவசாயிகளுக்கான நீர் விநியோக திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், விவசாயப் பயிர்களுக்கு வழங்கப்படும் பயிர் காப்பீட்டு திட்டங்கள், விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை குறைக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால சாகுபடி திட்டங்கள் பற்றியும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
இதனுடன், வருகிற 28ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டத்தை முன்னிட்டு, காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினை மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்த தற்போதைய நிலவரங்களையும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் விரிவாக ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Kuruvai ready cultivation Important decision regarding opening Mettur dam Chief Minister Vijay