இது மக்கள் மீதான நேரடித் தாக்குதல்...! - பெட்ரோல் டீசல் விலையேற்றத்தால் கொதிக்கும் ராகுல் காந்தி...! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை திடீரென உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் எம்.பி. ராகுல் காந்தியும் எரிபொருள் விலை உயர்வை கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “மோடி அரசின் தவறான பொருளாதார முடிவுகளுக்கான சுமையை மக்கள் தான் சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ரூ.3 என்ற அதிர்ச்சி ஏற்கனவே மக்கள்மீது திணிக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள சுமைகளும் இனி தவணை முறையில் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும்” என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

This direct attack people Rahul Gandhi furious over increase petrol and diesel prices


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->