அதிமுக-திமுக கூட்டணியா?ஆட்சியமைக்க அதிமுக வைத்திருந்த 2 திட்டங்கள்! உண்மையை உடைத்த தினகரன்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியமைப்பு தொடர்பாக பல்வேறு அரசியல் பரபரப்புகள் நிலவி வந்த நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியமைக்க இரண்டு திட்டங்களை வைத்திருந்ததாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்க முயற்சித்ததாக வெளியான தகவல்களையும் அவர் மறுத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய டிடிவி தினகரன், "திமுகவை தோற்கடிப்போம் என்ற முழக்கத்துடன்தான் தவெக தேர்தலை சந்தித்தது. அதையே முன்வைத்து அவர்கள் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். ஆனால் பின்னர் திமுக கூட்டணியின் ஆதரவுடன் ஆட்சியமைத்தனர். பாஜக ஆட்சிக்குள் வந்துவிடக்கூடாது என்றே சிலர் கூறுகிறார்கள். ஆனால் பாஜக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆட்சியமைப்பதில் அந்தக் கட்சி எந்த வகையிலும் தலையிடவில்லை" என்று கூறினார்.

மேலும், "அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியமைப்பதற்காக இரண்டு திட்டங்களை வைத்திருந்தோம். எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஆட்சியமைக்க தவெக தலைவர் விஜயிடம் ஆதரவு கேட்க திட்டமிட்டிருந்தோம். அதிமுகவின் வாக்குகளைப் பிரித்ததன் மூலம் தவெக வெற்றி பெற்றதால், அவர்களின் ஆதரவைப் பெறலாம் என்ற எண்ணம் இருந்தது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஜனாதிபதி ஆட்சி வரக்கூடாது என்பதே பல கட்சிகளின் நிலைப்பாடாக இருந்தது. திருமாவளவனை முதலமைச்சராக்கும் முயற்சி நடந்ததாக பேசப்பட்டது. ஆனால் அதற்கு பாஜகவின் பின்னணி எதுவும் இல்லை. எங்களின் திட்டம் தவெக ஆதரவுடன் ஆட்சியமைப்பதுதான்" என்று தெரிவித்தார்.

திமுகவுடன் நடைபெற்றதாக கூறப்படும் பேச்சுவார்த்தைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், "திமுகவிடம் நாங்கள் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்க முயற்சித்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல். எங்களுக்கும் திமுகவுக்கும் இதுகுறித்து எந்த தொடர்பும் இல்லை. அதேபோல், பாஜகவின் பின்னணியிலும் நாங்கள் செயல்படவில்லை. திமுகவும் எங்களிடம் ஆதரவு வழங்கும் முயற்சியை மேற்கொள்ளவில்லை" என்று விளக்கம் அளித்தார்.

டிடிவி தினகரனின் இந்த கருத்துகள், தேர்தலுக்குப் பிந்தைய ஆட்சியமைப்பு தொடர்பான அரசியல் விவாதங்களுக்கு மீண்டும் வலுசேர்த்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

An AIADMK DMK alliance The two plans AIADMK had for forming the government Dhinakaran reveals the truth


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->