பட்டப்பகலில் மயக்க மருந்து தெளித்து நகை, பணம் பறித்த மர்ம நபர்கள்.. போலீசார் விசாரணை.!
Unknown persons thefts gold and money passenger in Karur
கரூர் மாவட்டம் கடவூர் செம்பிநாதம் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 51). விவசாயியான இவர் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக மணப்பாறை பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது பேருந்து நிலையத்தில் திருச்சி செல்லும் பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.
அப்போது கன்னியப்பன் அருகில் வந்த 3 மர்ம நபர்கள் அருகில் வந்து மயக்கம் மருந்தை அவர் மீது தெளித்தனர். அடுத்த சில நொடிகளிலேயே கன்னியப்பன் மயக்கம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அந்த மர்மன் அவர்கள் கன்னியப்பன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் செயின், அரைப்பவும் மோதிரம், ரூ.1000 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.
அதன்பின்னர் மயக்கம் தெளிந்து பார்த்தபோது தான் அணிந்திருந்த நகை மற்றும் பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உடனடியாக மணப்பாறை போலீசில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். பேருந்து நிலையத்தில் பயணி மீது மயக்க மருந்து தெளித்து நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Unknown persons thefts gold and money passenger in Karur