66 வயதில் கர்ப்பமா...? வைரலான புகைப்படம் குறித்து நீனா குப்தா விளக்கம்...!
Pregnant 66 Neena Gupta clarifies viral photo
பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகை நீனா குப்தா தனது கணவருடன் ஐதராபாத் நகரில் நடைபெற்ற நடிகை ராஷ்மிகா மந்தனா -நடிகர் விஜய் தேவரகொண்டா திருமண விழாவில் கலந்து கொண்டார்.

அந்த விழாவில் நீனா குப்தாவும் அவரது கணவரும் இணைந்து நின்றபடி புகைப்படங்களுக்கு காட்சி அளித்தனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் கவனத்தை ஈர்த்தன.
ஆனால் அந்த படங்களில் நீனா குப்தாவின் வயிற்றுப் பகுதி சற்று பெரிதாக தெரிந்ததை பார்த்த சிலர், அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கினர்.
இதனால் 66 வயதான நடிகை குறித்து கர்ப்பம் பற்றிய வதந்தி காட்டுத்தீ போல பரவியது.இதற்கு விளக்கம் அளித்த நீனா குப்தா, “அப்படி எதுவும் இல்லை. திருமண விழாவில் நான் அணிந்திருந்த சேலையின் துணி சற்று தடிமனாக இருந்ததால் தான் நான் குண்டாகத் தெரிந்தேன்.
ஆனால் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்… இந்த வயதிலும் என் கர்ப்பம் பற்றி மக்கள் இவ்வளவு ஆர்வமாக பேசுவது பார்த்தால் எனக்கு சிரிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்று நகைச்சுவையுடன் பதிலளித்தார்.
English Summary
Pregnant 66 Neena Gupta clarifies viral photo