விஜய்–திரிஷா சர்ச்சை: கொடூரமான செயல்.. ஏற்க முடியாது.. கொந்தளித்த ஆர்த்தி ரவி - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சமீபத்தில் விஜய்யும் நடிகை திரிஷாவும் ஒரே நிற உடையில் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வு குறித்து ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையிலும் பல்வேறு கருத்துக்கள் வெளியானது. சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்ட நடிகை திரிஷாதான் என சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், திரிஷா இதுவரை அந்த சர்ச்சைக்கு நேரடியாக பதில் அளிக்கவில்லை. சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோதும் அவர் எந்த பதிலும் அளிக்காமல் அங்கிருந்து சென்றார்.

இதற்கிடையில் நடிகர் ரவி மோகன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு கவனம் பெற்றது. அதில், “பெண்கள்தான் எப்போதும் சரி என்று நினைக்கிறீர்கள். ஆனால் பல நேரங்களில் ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஒருநாள் நான் செய்ததை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். தயவு செய்து ஒருவரை அமைதியாக வாழ விடுங்கள்” என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு விஜய்க்கு மறைமுக ஆதரவாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த ஒரு பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. அந்த பதிவில், “விவாகரத்து கிடைக்கும் முன்பே ஒரு பெண் மற்றொரு ஆணுடன் மேட்சிங் உடையில் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தால் சமூகம் அதை ஏற்றுக்கொண்டிருக்கும் என நினைக்கிறீர்களா? அப்படிச் செய்த பிறகு பெண்கள்தான் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொன்னால் அது ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் இப்படிச் செய்து கொண்டு பாதிக்கப்பட்டவன் என சொல்லும் ஆண்களை நாங்களும் விமர்சிப்போம். இது ஒரு கொடூரமான செயல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை பகிர்ந்த ஆர்த்தி ரவி, “நேர்மைக்காக குரல் கொடுப்பவர்களுக்கு நன்றி” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன்பு ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தார். தற்போது அவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் ரவி மோகன் நடிகை கெனிஷாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும், இருவரும் ஒரே நிற உடையில் ஒரு திருமணத்தில் கலந்துகொண்டதாகவும் பேசப்பட்டது.

அந்த சம்பவத்தை ஒப்பிட்டு தான் தற்போது விஜய்யும் திரிஷாவும் ஒரே நிற உடையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தற்போது ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Trisha controversy A cruel act unacceptable Aarthi Ravi is upset


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->