'இது ஏமாற்று வேலை, ஓடி ஒளியாதீங்க'...! பிரச்சினையிலிருந்து தப்பி ஓடுவதா...? - போட்டியாளரை கார்னர் செய்த விஜய் சேதுபதி...!
This scam dont run away Running away from the problem Vijay Sethupathi cornered his rival
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள போட்டியாளருக்கு நடிகர் விஜய் சேதுபதி வழங்கிய கடுமையான அறிவுரை, தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 10-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் மொத்தம் 29 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.இதில் பிளாக் பாண்டி தலைவராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இதையடுத்து சாத்திகா, பிக்பாஸ் வீட்டின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த சூழலில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சாத்திகாவின் தலைமைப் பொறுப்பு குறித்து விஜய் சேதுபதி நேரடியாக கேள்வி எழுப்பியதுடன், தலைமைத்துவம் தொடர்பாக அவருக்கு கடுமையான அறிவுரைகளையும் வழங்கினார்.அப்போது விஜய் சேதுபதி பேசியதாவது,“தலைவர் என்றால் என்ன, தலைமைத்துவம் என்றால் என்ன என்பதே தெரியாமல், வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிவிட்டு வாக்குறுதிகளை அளிப்பது தலைமை அல்ல.
பொறுப்புகள் வரும்போது அதனை எதிர்கொள்ளாமல், பிரச்சினைகள் ஏற்பட்டதும் எதிரணியினர் மீது பழியை சுமத்திவிட்டு அங்கிருந்து விலகி ஓடுவது ஒரு தலைவருக்கான தகுதி கிடையாது.பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒருவர், அதற்கான சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும். பிரச்சினை வந்தவுடன் தப்பித்துச் செல்வதற்கு தலைமை என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது.
அத்தகைய செயலுக்கு தலைமைத்துவம் என்று பெயர் கிடையாது; அது ஏமாற்றுவேலை” என்று விஜய் சேதுபதி தெரிவித்தார்.தலைமைத்துவம் தொடர்பாக விஜய் சேதுபதி பேசிய இந்தக் கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.அவரது பேச்சை சிலர் அரசியல் சூழலுடன் ஒப்பிட்டு பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, தமிழக முதலமைச்சர் விஜய்யை நினைவுபடுத்தும் வகையில் விஜய் சேதுபதியின் அறிவுரை அமைந்துள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால், விஜய் சேதுபதியின் பேச்சு ஒரு நிகழ்ச்சியில் போட்டியாளருக்கு வழங்கப்பட்ட அறிவுரையா அல்லது வேறு அரசியல் கருத்துகளை மறைமுகமாக பிரதிபலிப்பதா என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது. இதன் காரணமாக அவரது பேச்சு தற்போது சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
This scam dont run away Running away from the problem Vijay Sethupathi cornered his rival