''யாருடைய பேச்சு சுதந்திரத்திலும் தேவையின்றி தலையிடக் கூடாது'' நடிகர் சஞ்சய் தத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள நக்மா..!
Nagma has spoken out in support of actor Sanjay Dutt regarding the Marathi language controversy
மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் நடைபெற்ற உறியடி திருவிழா நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் இந்தியில் பேசினார்.
அப்போது அங்கிருந்த சிவசேனா கட்சி நிர்வாகி ஒருவர், அவரை மராத்தி மொழியில் பேசுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு நடிகர் சஞ்சய் தத், சிரித்தபடி மறுப்பு தெரிவித்ததோடு,' மகாராஷ்டிராவின் எரவாடா சிறையில் 06 ஆண்டுகள் கழித்த போதிலும், என்னால் மராத்தி மொழியைக் கற்க முடியவில்லை.' என்று நகைச்சுவையாகக் பதில் கூறினார்.
இவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்நிலையில், முன்னாள் நடிகை நக்மா சஞ்சத் தத்திற்கு ஆதரவாக தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறியுள்ளதாவது; ''மகாராஷ்டிரா மாநிலத்தில் வாழ்ந்ததால், பள்ளியிலேயே மராத்தி மொழியைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. எனது தாயாரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்பதால் எனக்கு மராத்தி தெரியும். மேலும் எங்கள் வீட்டுப் பணியாளர்களிடமும் நாங்கள் மராத்தியிலேயே பேசினோம். ஒரு மராத்தி திரைப்படத்திலும் நான் நடித்துள்ளேன். ஒரு குறிப்பிட்ட மொழியைக் கற்பதும், பேசுவதும் தனிநபரின் சூழ்நிலை மற்றும் அவர்களின் தேவையைப் பொறுத்தது.
எனவே, யாருடைய பேச்சு சுதந்திரத்திலும் நாம் தேவையின்றி தலையிடக் கூடாது.'' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 1992-ஆம் ஆண்டு வெளியான 'யல்கார்' மற்றும் 2000-ஆம் ஆண்டு வெளியான 'சல் மேரே பாய்' உள்ளிட்ட படங்களில் நடிகர் சஞ்சய் தத்துடன், நடிகை நக்மா இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Nagma has spoken out in support of actor Sanjay Dutt regarding the Marathi language controversy