கர்ப்பமாக இருந்தபோது ‘ஜெயிலர் 2’ பாடலுக்கு நடனம்: நடிகை பூர்ணா பகிர்ந்து கொண்ட திடுக்கிடும் மற்றும் சுவாரஸ்யமான தகவல்...! - Seithipunal
Seithipunal


திருமணம் மற்றும் குழந்தைப் பேறுக்குப் பிறகு நடிகைகளின் திரைப்பயணத்தில் இடைவெளி ஏற்படும் என்ற பொதுவான கருத்து நிலவி வருகிறது. ஆனால், தனது வாழ்க்கையில் அதுபோன்ற எந்தத் தடையும் ஏற்படவில்லை என்றும், திருமணம் மற்றும் தாய்மையை ரசித்துக்கொண்டே தொடர்ந்து திரைப்பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகியுள்ளது.இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முதல் பாகத்தைப் போலவே இந்தப் படத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 15-ந் தேதி திரைப்படம் திரைக்கு வர உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் பாடலான ‘அல்ல போலேலோ’ அண்மையில் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலில் நடிகை பூர்ணா சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடல் ரசிகர்களிடம் ஏற்படுத்திய அதிர்வலைகளைப் போலவே, ‘அல்ல போலேலோ’ பாடலும் வெளியாகியதும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

குறிப்பாக வெள்ளை நிற சேலையில் பூர்ணா ஆடிய நடனமும், பாடலின் தாளத்துக்கு ஏற்ப அவர் வெளிப்படுத்திய முகபாவனைகளும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.இந்த நிலையில், ‘அல்ல போலேலோ’ பாடலுக்கான படப்பிடிப்பின்போது தான் கர்ப்பமாக இருந்ததாக நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருந்தது அப்போது தனக்கே தெரியாது என்றும், பாடல் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு மற்றொரு திரைப்படத்தில் நடிக்கச் சென்றபோதுதான் தான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய பேட்டியில் தனது திரைப்பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய பூர்ணா, திருமணம் செய்துகொண்ட பிறகு அல்லது குழந்தை பெற்ற பிறகு நடிகைகளுக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற கருத்து பொதுவாக நிலவி வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், தனது வாழ்க்கையில் அத்தகைய சூழல் ஏற்படவில்லை என்றும், கதாநாயகியாக பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்த காலத்திலேயே திருமணம் செய்து கொண்டு, குழந்தை பெற்றுக்கொண்டு தாய்மையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது மனதில் இருந்த அந்த ஆசைகள் அனைத்தும் தற்போது நிறைவேறியிருப்பதாகவும், குடும்ப வாழ்க்கையையும் திரைப்பயணத்தையும் ஒருசேர மகிழ்ச்சியுடன் முன்னெடுத்து வருவதாகவும் பூர்ணா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dancing song Jailer 2 while pregnant Actress Poorna shares shocking and interesting information


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->