நாட்டின் வங்கி ஊழியர்கள் போராட்டம்...! வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை வங்கிகள் சேவைகள் கிடைக்காது...! - Seithipunal
Seithipunal


வங்கி ஊழியர்களின் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் அடுத்தடுத்து வரும் விடுமுறைகள் காரணமாக, தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கிகளின் நேரடி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.வங்கி ஊழியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும், சாதாரண நிலை ஊழியர்களிடம் மேற்கொள்ளப்படும் பாரபட்சமான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதும் வங்கி ஊழியர் சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

இதன் காரணமாக வேலைநிறுத்த நாள் மற்றும் தொடர்ந்து வரும் விடுமுறைகள் இணைந்து, வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை வங்கிகளின் வழக்கமான பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால், தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கி கிளைகளில் நேரடி சேவைகள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.

இதனால் வங்கிக்கு நேரில் சென்று பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், காசோலை உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படக்கூடும். அதேவேளையில், இணையவழி வங்கி சேவைகள், ஏ.டி.எம். உள்ளிட்ட தானியங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தமிழக பொதுச்செயலாளர் ரோஷன் கார்க்கி தெரிவித்ததாவது,"வங்கி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விவகாரத்தில் உயர் அதிகாரிகளுக்கும், சாதாரண ஊழியர்களுக்கும் இடையே பாரபட்சமான அணுகுமுறை பின்பற்றப்படுவதை கண்டித்தும், நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் இரண்டு கட்ட வேலைநிறுத்தப் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, வரும் 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.இவ்வாறு ரோஷன் கார்க்கி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bank employees country protesting Bank services not be available from Friday to Monday


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->