அதிகமாகப் பேசுவது திறமையின் அடையாளமல்ல...! முதல்வர் விஜய் குறித்த விமர்சனங்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அதிரடி விளக்கம்...! - Seithipunal
Seithipunal


சென்னை புறநகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்த அவர், அவர்களின் எதிர்காலப் பயணம் சிறப்பாக அமையவும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது,"சட்டமன்றத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் அதிகமாக பேசுவதில்லை என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சனம் செய்தனர். ஆனால், முதல்-அமைச்சர் விஜய் தனது பதிலுரையின்போது எதிர்க்கட்சிகள் முன்வைத்த அனைத்து விமர்சனங்களுக்கும் உரிய பதில்களை அளித்தார்.

அதிகமாகப் பேசுவது மட்டுமே சிறந்த சிந்தனைக்கு அடையாளம் கிடையாது. ஆழமாக சிந்திப்பவர்கள் தங்களது கருத்துகளை தேவையான நேரத்தில், தேவையான அளவில் வெளிப்படுத்துவார்கள்.

அந்த வகையில், சிறந்த சிந்தனையாளர்கள் அதிகம் பேசமாட்டார்கள்.ஒரு காலத்தில் மேடைப் பேச்சில் அடுக்கடுக்கான சொற்களைப் பயன்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தவர்களுக்கு அரசியலில் தனி வரவேற்பு இருந்தது. தமிழை அழகாகவும் அடுக்குமொழியிலும் பேசினால் அதற்காகவே மக்கள் வாக்களித்த காலமும் இருந்தது.

ஆனால், இன்றைய சூழல் முற்றிலும் மாறிவிட்டது. வெறும் பேச்சுத் திறமையால் மட்டும் மக்களின் ஆதரவைப் பெற முடியாது. யாரால் உண்மையாக மக்களுக்கு சேவை செய்ய முடியும், யாரிடம் நாட்டின் வளர்ச்சிக்கான செயல்திறன் இருக்கிறது என்பதை மக்கள் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.

மக்களின் நம்பிக்கையைப் பெறுபவர்களுக்கே இனி அரசியல் களத்தில் வெற்றி கிடைக்கும் என்ற புதிய நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது.இவ்வாறு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Talking too much not sign talent Speaker Jcd Prabhakar sharp explanation for criticism of Chief Minister Vijay


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->