‘டிசி’ படத்தின் வெற்றி; அருண் மாதேஸ்வரன், அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜூக்கு BMW கார்களை பரிசலித்த கலாநிதிமாறன்..! - Seithipunal
Seithipunal


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 07-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டிசி’. இந்தப் படத்தில் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். படத்துக்கு அனிருத் இசையமைத்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்தது.

படம் திரையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்தப் படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலை வாரி குவித்தது.

ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் இந்த படத்தை வெளியிட்டது. ‘டிசி’படம் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது. குறிப்பாக படத்தின் பின்னணி இசை ரசிகர்களால்அதிகம் கவரப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ‘டிசி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் BMW கார்களை பரிசாக வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kalanithi Maran gifted BMW cars to Arun Matheswaran and Lokesh Kanagaraj for the success of the movie


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->