மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ள அதிமுக..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு, கரூர் உள்ளிட்ட ஏழு தொகுதிகள் காலியாக உள்ளன. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர்த்து மற்ற ஐந்து தொகுதிகள் மீதான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதன்காரணமாக இந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 06-ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில், திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.  ஆளும் தவெக சார்பில் ஏற்கனவே அந்தத் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல், சத்யபாமாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக தாராபுரத்தில் பானுமதி, மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத் ஆகியோர் போட்டியிடுவார் என அறிவித்துள்ளது.

இதில் தவெகவும், அதிமுகவும், இரண்டு தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. இந்தத் தொகுதிகளில் ஏற்கனவே அதிமுக வெற்றி பெற்றதன் காரணமாக, வரும் இடைத் தேர்தல் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் தொடங்கி நடை பெற்றுவருகிறது. வரும் 16-ஆம் தேதியோடு வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 06-ஆம் தேதி வாக்குப்பதிவும், 09-ஆம் தேதி தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK fields female candidates in the Maduranthakam and Dharapuram by elections


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->