மதுரை கோரிப்பாளையம் அருகே முதியவரை தகாத வார்த்தைகளில் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த பள்ளி மாணவன்; வீடியோ வைரல்..! - Seithipunal
Seithipunal


மதுரையில் பள்ளி மாணவன் ஒருவர் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை, கோரிப்பாளையம் அருகே தமுக்கம் மைதானத்தைச் சுற்றி பல்வேறு கல்லூரிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலத்தின் கீழே தமுக்கம் மைதானம் - தல்லாகுளம் தபால் நிலையத்தைக் கடக்கும் பாதை ஒன்று உள்ளது.

அந்த இடத்தில் வைத்து நேற்று  காலை 09 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் ஒருவரை பள்ளி மாணவன் ஒருவன் தகாத வார்த்தைகளில் திட்டி தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் முதியவரை தாக்குவது போன்ற காட்சிகளும், பதிலுக்கு முதியவரும் அந்த மாணவனை தாக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. 

அத்துடன், சில ஆட்களை அழைப்பதாக கூறி மாணவன் செல்போன் மூலம் தொடர்பு கொள்ளும் காட்சிகளும், பின்னர் அந்த முதியவர் புறப்படும் போதும் மீண்டும் அந்த மாணவன் தாக்க முற்படும் காட்சிகளும் பதிவாகியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் முதியவரை அந்தபள்ளிமாணவன் ஏன் தாக்கினார்? எந்த பள்ளி மாணவன் என்பது குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி அவரை கண்டிக்க வேண்டும் என்ற சமூக வலைத்தளங்களில் கோரிக்கை எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A video of a school student in Madurai verbally abusing assaulting and threatening to kill an elderly man has gone viral


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->