சினிமா ஆசையில் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்...! 'ராஜ்கமல் பிலிம்ஸ்' பெயரைப் பயன்படுத்தி மோசடி...! - அறிக்கை வெளியீடு...! - Seithipunal
Seithipunal


திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி முயற்சிகள் நடைபெறுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் எந்தவொரு பட வாய்ப்பு முகவர்களும் நியமிக்கப்படவில்லை என நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனால் கடந்த 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், இந்திய திரையுலகில் குறிப்பிடத்தக்க திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.ஆரம்பத்தில் “ஹாசன் பிரதர்ஸ்” என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தையும், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பிரபல தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர்களின் பெயர்களை பயன்படுத்தி மோசடி செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரையும் சிலர் தவறாக பயன்படுத்தி பட வாய்ப்பு தொடர்பாக தகவல்களை பரப்புவதாக தெரியவந்துள்ளது.இதையடுத்து, பொதுமக்களும், திரைத்துறையில் வாய்ப்பு தேடும் இளைஞர்களும் இதுபோன்ற தகவல்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,“ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்தவொரு பட வாய்ப்பு முகவர்களையும் நாங்கள் நியமிக்கவில்லை.

எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக எந்த வழியில் தகவல் வந்தாலும், அதை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

எங்கள் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இதுபோன்ற போலியான தகவல்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dont be fooled by paying money desire cinema Fraud using name Raajkamal Films Report released


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->