“அன்புதான் வெல்லும் என்பது உறுதியாகிவிட்டது!” – மாதம்பட்டி ரங்கராஜுடன் மீண்டும் சேர்ந்தது குறித்து ஜாய் கிரிஸில்டா உருக்கம் - Seithipunal
Seithipunal


ஜாய் கிரிஸில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இடையேயான குடும்ப விவகாரம் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது இருவரும் மீண்டும் இணைந்து தங்களது மகன் ராகாவுடன் வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், கணவருடன் மீண்டும் இணைந்தது குறித்து ஜாய் கிரிஸில்டா சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஜாய் கிரிஸில்டா ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவருக்கு ஒரு மகனும் உள்ளார். அதேபோல், மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே ஸ்ருதி என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில், இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த உறவில் ஜாய் கிரிஸில்டா கர்ப்பமாகி ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.

ஒரு கட்டத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னிடம் இருந்து விலகுவதாக ஜாய் கிரிஸில்டா கூறியதையடுத்து, இந்த விவகாரம் பொதுவெளிக்கு வந்தது. தொடர்ந்து இருவருக்கும் இடையே சட்ட ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டன.

குழந்தையின் தந்தை யார் என்பதை உறுதி செய்வதற்காக டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில், ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜின் மகன் என்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜாய் கிரிஸில்டாவையும் அவர்களது மகன் ராகாவையும் மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. பல மாதங்களாக நீடித்து வந்த இந்த விவகாரம் தற்போது சுமூகமான நிலைக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஜாய் கிரிஸில்டா தனது குடும்ப வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், “நாங்கள் மீண்டும் சேர்ந்ததற்கு குழந்தைதான் காரணம். அதற்கான ஒரு நீதி வாங்கிக் கொடுத்தாச்சு. ஒரு அம்மாவாக குழந்தையை அப்பாவிடமிருந்து பிரிக்க முடியாது. யாருக்குமே அந்த உரிமை கிடையாது. அன்புதான் வெல்லும் என்பது என் விஷயத்தில் உறுதியாகிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

தனது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இந்த உறவு மீண்டும் சுமூகமான நிலைக்கு வந்ததாக ஜாய் கிரிஸில்டா கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

தற்போது இருவரும் தங்களது மகன் ராகாவுடன் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் ராகாவுக்கு மொட்டை மற்றும் காதுகுத்து நிகழ்ச்சி நடைபெற்றபோது மாதம்பட்டி ரங்கராஜும் அதில் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகின.மேலும், தனது மகன் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் முன்பு வெளியிட்டிருந்த அறிக்கையும் தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

அதில், தனது மகன் ராகாவுக்கு ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு மாதங்களாக முழு பொறுப்புடனும் அன்புடனும் செய்து வருவதாகவும், இனி தனது வாழ்நாள் முழுவதும் ராகாவின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக முழு பொறுப்புடனும் அன்புடனும் துணை நிற்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

பல மாதங்களாக நீடித்து வந்த குடும்ப மற்றும் சட்டப் பிரச்சினைகளுக்குப் பிறகு, தற்போது இருவருக்கும் இடையேயான உறவு சுமூகமான பாதைக்கு திரும்பியிருப்பதாக கூறப்படுகிறது.

ஜாய் கிரிஸில்டாவின் சமீபத்திய பேட்டி மற்றும் ராகாவுடன் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து பங்கேற்ற நிகழ்வுகள், இருவரும் தங்களது மகனின் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்தி வாழ்க்கையை தொடர்வதாக காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, இருவரும் இனி எந்தவித பிரச்சினையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து, மகன் ராகாவை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It is certain that love triumphs Joy Griselda shares an emotional message about reuniting with Madhampatti Rangaraj


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->