இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் பாலியல் அத்துமீறல் விளம்பரங்கள்...? மெட்டா இந்தியா தலைவருக்கு நேரில் ஆஜராக சம்மன்...! - Seithipunal
Seithipunal


இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகள் பாலியல் சுரண்டலுடன் தொடர்புடையதாக கூறப்படும் விளம்பரங்கள் இடம்பெற்றதாக எழுந்துள்ள புகார்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் பெறுமாறு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளின் பின்னணி குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளது. ஆன்லைன் தளங்களில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் பரப்பப்படுவதாகவும், அவை விளம்பரங்கள் மூலம் பயனர்களை சென்றடைவதாகவும் கூறப்படும் புகார்கள் குறித்து ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இதுதொடர்பாக மெட்டா நிறுவனத்திடம் ஆணையம் விளக்கம் கோரியிருந்தது. ஆனால், விவகாரத்தின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கையாக நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மெட்டா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் இன்று புதன்கிழமை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முன்பு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

குழந்தைகளின் பாதுகாப்பை பாதிக்கும் வகையிலான உள்ளடக்கங்கள் இணையவழி தளங்களில் எவ்வாறு பரவுகின்றன, அவற்றை கட்டுப்படுத்த நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குழந்தைகள் பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் ஆன்லைன் தளங்கள் மூலம் கிடைப்பதாகவும், அவை விளம்பரப்படுத்தப்படுவதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அரசு ஏற்கனவே மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் கட்டுப்படுத்துவதில் இணையவழி நிறுவனங்களின் பொறுப்பு குறித்து இந்த விவகாரம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Child harassment ads on Instagram Meta India chief summoned to appear in person


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->