கோர்ட்டில் ஆஜராக இருந்த நிலையில் தாக்குதல்...! துணை நடிகர் ஆண்டனி தாமஸுக்கு வெட்டு...! - 3 கோணங்களில் போலீஸ் விசாரணை...! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேட்டில் திரைப்பட எழுத்தாளரும், துணை நடிகருமான ஒருவரின் வீட்டுக்குள் கத்தியுடன் புகுந்த 2 மர்ம நபர்கள், அவரை தலையில் வெட்டிவிட்டு தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், “கோர்ட்டுக்கு வரக்கூடாது; காவலர்களிடம் அளித்த புகாரை திரும்பப் பெற வேண்டும்” என மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.சென்னை கோயம்பேடு மெட்டுக்குப்பம் கோவர்த்தன் நகரைச் சேர்ந்தவர் ஆண்டனி தாமஸ் (35). திரைப்பட எழுத்தாளராக பணியாற்றி வரும் இவர், பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராகவும் நடித்து வருகிறார்.

இவரது தாயார் புஷ்பலதா, தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆண்டனி தாமஸ் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத 2 நபர்கள் திடீரென கத்தியுடன் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.அவர்கள் ஆண்டனி தாமஸை கத்தியால் தலையில் வெட்டியதுடன், “நாளை கோர்ட்டுக்கு வரக்கூடாது. காவலர்களிடம் அளித்த புகாரை திரும்பப் பெற வேண்டும்” என எச்சரித்து மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து இருவரும் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றுள்ளனர்.மர்ம நபர்களின் தாக்குதலில் ஆண்டனி தாமஸின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் குறித்து ஆண்டனி தாமஸ் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.காவலர்களின் முதல்கட்ட விசாரணையில், கடந்த மே மாதம் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக சதீஷ் சிங் என்பவர் மீது ஆண்டனி தாமஸ் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது தெரியவந்துள்ளது.

மேலும், இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த வழக்கில் நேற்று ஆண்டனி தாமஸ் கோர்ட்டில் ஆஜராக வேண்டியிருந்த நிலையில், அதற்கு முந்தைய இரவில் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதனால், பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, ஆண்டனி தாமஸின் தாயார் புஷ்பலதா கடந்த மாதம் முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுகிறது.அந்த பதிவில் தகாத வார்த்தைகளில் கருத்து தெரிவித்ததாக கூறப்படும் தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, புஷ்பலதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவும் ஆண்டனி தாமஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பான பிரச்சினையா, கோர்ட்டில் நடைபெறும் வழக்கில் ஆஜராகவிடாமல் தடுக்கும் நோக்கத்திலான தாக்குதலா அல்லது புஷ்பலதாவின் சமூக வலைதள பதிவு தொடர்பான சர்ச்சையா என பல்வேறு கோணங்களில் கோயம்பேடு காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய 2 மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது. அவர்களை கைது செய்ய காவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Attacked while appearing in court Supporting actor Antony Thomas was stabbed Police investigation from 3 angles


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->