சிவகார்த்திகேயனுக்கு தந்தையாகிறாரா சீமான்...? - 'சேயோன்' படத்தின் மிரட்டலான லுக் வைரல்...! - Seithipunal
Seithipunal


‘தாய்க்கிழவி’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன், அடுத்ததாக ‘சேயோன்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும், பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நடிகர் கமல்ஹாசன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இயக்குநரும் நடிகருமான சீமான் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘சேயோன்’ படத்தில் சீமான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் தோற்றத்தை படக்குழு நேற்று வெளியிட்டது. இதுவரை ரசிகர்கள் பார்த்திராத மாறுபட்ட தோற்றத்தில் சீமான் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.‘எல்.ஐ.கே.’ திரைப்படத்துக்குப் பிறகு சீமான் நடிக்கும் படமாக ‘சேயோன்’ அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரையை மையமாகக் கொண்ட பாரம்பரிய பின்னணியுடன், கிராமத்து வாழ்க்கை மற்றும் உறவுகளை பிரதிபலிக்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. அதிரடி காட்சிகள், குடும்ப உறவுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்து ஒரு பிரமாண்டமான கிராமத்து கதைக்களமாக படம் உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு, முக்கியமான சண்டைக்காட்சிகள் மற்றும் குடும்பக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், ‘சேயோன்’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட சீமானின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளன.

படத்தில் சீமான், சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் திரையுலக வட்டாரங்களில் வெளியாகியுள்ளது. ஆனால் அவரது கதாபாத்திரம் குறித்த முழுமையான விவரங்களை படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

சிவகார்த்திகேயன் - சீமான் கூட்டணி திரையில் எந்த வகையான உறவை வெளிப்படுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman becomes Sivakarthikeyan father scary look Seyon viral


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->