'ஐ.யு.எம்.எல். என்றைக்கும் மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டான தேசிய இயக்கம்'; மாணிக்கம் தாகூர்..! - Seithipunal
Seithipunal


''மத்திய பாஜக அரசை பற்றி பேசுவதற்கு, எதிர்க்கட்சி (திமுக) உட்பட அனைவரும் இங்கு திடீரென அமைதியாகிவிட்டார்கள். யாரும் மே 04-க்கு பிறகு பேசுவதில்லை.'' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர் கூறியதாவது; மத்திய பாஜக அரசு, தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என்பது சி.ஏ.ஜி. அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது என்றும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே பாஜக தென் மாநிலங்களை பார்க்கிறது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், மத்திய பாஜக அரசை பற்றி பேசுவதற்கு எதிர்க்கட்சி (திமுக) உட்பட அனைவரும் இங்கு திடீரென அமைதியாகிவிட்டார்கள். யாரும் மே 4-க்கு பிறகு பேசுவதில்லை. காங்கிரஸ் தொடர்ந்து இதனை பேசுவோம் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு வஞ்சனை செய்வதை ஆளும் கட்சி உட்பட அனைவரும் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியது அவர்களின் கடமை என்றும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

மேலும், மதச்சார்பற்ற தமிழ்நாட்டை தாக்குவதற்காகவும், உடைப்பதற்காகவும் பல வழிகளில் பாஜக முயற்சித்து வருகிறது என்றும், மதச்சார்பின்மையை தொடர்ந்து காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. அதுவே இந்தக் கூட்டணியில் மதச்சார்பின்மை மற்றும் சமூகநீதி என பெயர் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சமூகநீதியை பொறுத்தவரை ஜாதி வாரி கணக்கெடுப்பின் மூலம், தமிழ்நாட்டின் 96% இட ஒதுக்கீட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து வரப்போகிறதாகவும்  இதற்காக வரும் 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு இயக்கம் நடத்துகிறோம் என்றும், அதற்கு தி.க. தலைவர் வீரமணி வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐ.யு.எம்.எல். என்றைக்கும் மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டான தேசிய இயக்கம் என்று கூறியதோடு, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். பாஜக ஆகியவை மற்ற மதத்தினரை இரண்டாம் தரக் குடிமக்கள் எனும் வன்மத்தோடு பார்ப்பார்கள். ஐ.யு.எம்.எல். வன்மத்தோடு மற்றொரு மதத்தை பார்த்தது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Manickam Tagore describes the IUML as a national movement that has always stood as an example of secularism


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->