அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாள்: சென்னை அண்ணா சாலையில் உள்ள சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்...! - Seithipunal
Seithipunal


பேரறிஞர் அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 118-ஆவது பிறந்த நாள் வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, அன்று காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.இதனைத் தொடர்ந்து, அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளும் அண்ணாவின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

அண்ணாவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டு வரும் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதனுடன், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி, கலைப் பிரிவு உள்ளிட்ட கழகத்தின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் திரளாக பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் தற்போதைய மற்றும் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணாவுக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதிமுக தலைமைக் கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anna 118th birth anniversary ​​Edappadi Palaniswami pay floral tributes statue Anna Salai Chennai


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->