மீனவனாக நடிக்கக் கிடைத்தது பாக்கியம்...! ‘மண்டாடி’ பட வெற்றி குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி...!
I lucky play fisherman Actor Soori emotional about success Mandaadi
கடல் வாழ்க்கையையும், மீனவ மக்களின் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தில் மீனவனாக நடித்ததை தனது வாழ்வில் கிடைத்த பாக்கியமாக கருதுவதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சூரி, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தின் வாயிலாக கதாநாயகனாக புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கினார்.

தொடர்ந்து ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.அவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் வெற்றியை பதிவு செய்துள்ளன.மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தில் சூரி, மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடலையும், மீனவ மக்களின் வாழ்வியலையும் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.‘மண்டாடி மண்டாடி’, ‘உசுரே நீதான் புள்ள’, ‘ஒலி வட்டம்’ உள்ளிட்ட பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.
குறிப்பாக ‘மண்டாடி மண்டாடி’ பாடலில் சூரி ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டதுடன், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.‘மண்டாடி’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ராமநாதபுரம் பகுதியின் பாரம்பரிய கடல் விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், திரையரங்குகளில் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், படம் வெளியான முதல் நாளில் ரூ.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.படத்தின் வரவேற்பு குறித்து நடிகர் சூரி பேசுகையில், ‘மண்டாடி’ படத்திற்காக உழைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி இருப்பதாக தெரிவித்துள்ளார்.தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினரின் கூட்டு உழைப்புக்கு கிடைத்த வெற்றிதான் தற்போது கிடைத்துள்ள வரவேற்பு என்றும், இந்தப் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் பல மாதங்களாக கடலில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு பணியாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
படத்திற்கு ரசிகர்கள் அளித்து வரும் வரவேற்பு தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும், திரையரங்குகளில் ரசிகர்கள் படத்தை உற்சாகமாக கொண்டாடி வருவதை பார்க்கும்போது தங்களது உழைப்புக்கு முழுமையான பலன் கிடைத்துள்ளதாகவும் சூரி தெரிவித்துள்ளார்.‘மண்டாடி’ திரைப்படத்தின் வெற்றியை கடலோர மீனவ மக்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் அர்ப்பணிப்பதாக சூரி தெரிவித்துள்ளார்.
அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை என கடலோர மக்களின் ஒவ்வொருவரையும் மனதில் வைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளதாகவும், அவர்களிடம் இந்த வெற்றியை சமர்ப்பிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், மீனவ மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதையில் ஒரு மீனவனாக நடிக்கக் கிடைத்த வாய்ப்பை தனது வாழ்க்கையில் கிடைத்த பாக்கியமாக கருதுவதாக நடிகர் சூரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
English Summary
I lucky play fisherman Actor Soori emotional about success Mandaadi