'புதிய தலைமைச் செயலகத்தை திருச்சியில் கட்ட வேண்டும்'; துரை வைகோ வலியுறுத்தல்..!
Durai Vaiko urges that the new Secretariat be built in Trichy
திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என ஏற்கெனவே முதல்வர் விஜய்யிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், இதுவே முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கனவும் ஆகும் என்பதால், புதிய தலைமைச் செயலகத்தை திருச்சியில் கட்ட வேண்டும் என்று திருச்சி எம்.பி. துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;
லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை முதல்வர் விஜய் கொடுத்துவருவதால், மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்றும், மக்கள் ஆதரவுடன் தவெக தலைமையிலான கூட்டணி இடைத்தேர்தல்களில் வெற்றி பெறும். இந்தக் கூட்டணியில் தேர்தலின் கடைசி நேரத்தில் இடதுசாரிக் கட்சியினர் இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், மிசா சட்டம் அமலில் இருந்தபோது முதலில் கைது செய்யப்பட்டதும், கடைசியாக விடுதலை செய்யப்பட்டதும் வைகோதான் என்றும், அப்போது, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிற காரணங்களுக்காகவும் சிலர் கைது செய்யப்பட்டனர். அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது நேரடி அரசியல் காரணத்துக்காக அல்ல என்று தெரிவித்துள்ளார்.

மேலும், முதல்வர் விஜய் உடல்மொழி குறித்துத் தனிப்பட்ட நபர் யாரையும் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை எனக் கூறிவிட்டார். ஆனால், தன்னைப் பார்த்துதான் பேசியதாகச் சிலர் அனுதாபத்தைத் தேடுவது போன்று தெரிகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு மதிமுகதான் காரணம். இந்த விவகாரத்தில் அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி கடந்த திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தவெக அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இது குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் எனவும், ஏற்கெனவே முதல்வர் விஜய்யிடம் வலியுறுத்தினேன். இதுவே முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கனவும் ஆகும் என்றும், புதிய தலைமைச் செயலகத்தை திருச்சியில் கட்ட வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இண்டியா கூட்டணி முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Durai Vaiko urges that the new Secretariat be built in Trichy