அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கை செப்.18 வரை விசாரிக்க இடைக்கால தடை: புதுச்சேரி தலைமை நீதிபதி உத்தரவு..! - Seithipunal
Seithipunal


தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கை வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி வரை விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 நிதியமைச்சர் மரிய வில்சன் மீது, புதுச்சேரியில் உள்ள சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கியதாக தொடரப்பட்ட புகாரின் அடிப்படையில் லாஸ்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு புதுச்சேரி நீதித்துறை நடுவர் மன்றம் எண் 1-இல் விசாரணை நடந்து வந்தது.

குறித்த வழக்கை விசாரித்து வந்த நீதித்துறை நடுவர் சேரலாதன் மாஹேவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 1-இல் நடந்த இவ்வழக்கை நீதித்துறை நடுவர் மன்றம் எண் 2-இல் நீதித்துறை நடுவர் சந்திரசேகர் விசாரித்து வருகிறார்.

குறித்த வழக்கு விசாரணை நீதித்துறை நடுவர் சந்திரசேகர் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அத்துடன், லாஸ்பேட்டை போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கில் தனக்கு எதிரான சட்டப்பிரிவுகளில் இருந்து விடுவிக்கக் கோரி அமைச்சர் தரப்பில் மனுத் தாக்கலும், அரசு தரப்பில் பதில் மனுவும் ஏற்கெனவே தாக்கலாகியுள்ளது. இதனால், இம்மனு மீதான விசாரணைக்கு அவகாசம் கோரியதால் 21-ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதித்துறை நடுவர் மன்றம் எண் 1-இல் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க முடியும். வேறு நீதிமன்றங்களில் நடத்த முடியாது. அதனால் இங்கு நடத்தக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தனர். இதன்காரணமாக  இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஆனந்த், இவ்வழக்கை வரும் 18-ஆம் தேதி வரை விசாரிக்க இடைக்கால தடை விதித்துள்ளார். அத்துடன், அன்றைய தினம் இம்மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி முன்பாக வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Interim stay on hearing the case against Minister Maria Wilson until Septemer 18


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->