அல்லு அர்ஜுனின் புதிய மல்டிப்ளெக்ஸ்: ஷங்கரை மதிக்காத அல்லு அர்ஜுன்?.. அட்லிக்கு கிடைத்த மரியாதை.. கடுப்பான ரசிகர்கள்!
Allu Arjun new multiplex Allu Arjun disrespecting Shankar Respect for Atlee Die hard fans
தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி திறந்து வைத்த அல்லு அர்ஜுனின் புதிய மல்டிப்ளெக்ஸ் திரையரங்கம் நேற்று ஹைதராபாத்தில் திறக்கப்பட்டது. இந்த திரையரங்கில் இந்திய சினிமாவின் சிறந்த இயக்குநர்களை கவுரவிக்கும் விதமாக “வால் ஆஃப் கிரேட் டைரக்டர்ஸ்” என்ற சிறப்பு பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்களான மணிரத்னம், வெற்றிமாறன், எஸ்.எஸ். ராஜமெளலி, அட்லி, ராஜ்குமார் ஹிரானி, ரிஷப் ஷெட்டி, பிரசாந்த் நீல், சுகுமார், சஞ்சய் லீலா பன்சாலி, லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் ஷங்கரின் புகைப்படம் அந்த பட்டியலில் இடம்பெறாதது ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஷங்கரின் சீடரான இயக்குநர் அட்லியின் புகைப்படம் இடம்பெற்றுள்ள நிலையில், ஷங்கரை தவிர்த்தது ஏன்? என கோலிவுட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“இந்திய சினிமாவை உலக அரங்கில் அறிமுகப்படுத்திய இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். அவருக்கு இடம் கொடுக்காமல் லேட்டஸ்ட்டாக பிரபலமான சில இயக்குநர்களின் புகைப்படங்களை மட்டும் வைத்திருப்பது சரியல்ல” என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ராம் கோபால் வர்மா, சிங்கீதம் ஸ்ரீனிவாஸ், கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் போன்ற முக்கிய இயக்குநர்களின் பெயர்களும் பட்டியலில் இல்லாதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கிடையில், அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் சிலர் இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து, “அல்லு அர்ஜுனுக்கு பிடித்த இயக்குநர்களின் பட்டியலாகவே இது இருக்கலாம். அனைவரையும் சேர்ப்பது சாத்தியமில்லை” என ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் பிரீமியர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து காரணமாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திற்குப் பிறகும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தனது குடும்ப நிகழ்ச்சிகளுக்கும், புதிய திரையரங்க திறப்பு விழாவுக்கும் அழைத்தது கவனம் பெற்றது.
இந்த நிலையில், புதிய மல்டிப்ளெக்ஸில் அமைக்கப்பட்ட ‘வால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் இருந்து சில முக்கிய இயக்குநர்கள் விடுபட்டது தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.
English Summary
Allu Arjun new multiplex Allu Arjun disrespecting Shankar Respect for Atlee Die hard fans