தனுஷை கட்டிப்பிடித்து அழுத கருணாஸ் மனைவி!யூத் இசை வெளியீட்டு விழாவில் உருக்கமாக பேசிய கிரேஸ் கருணாஸ்! - Seithipunal
Seithipunal


நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் கதை எழுதி, இயக்கி, நடித்துள்ள ‘யூத்’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ‘யூத்’ படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாடகியும் கென் கருணாஸின் அம்மாவுமான கிரேஸ், மேடையில் உணர்ச்சிவசப்பட்டு நடிகர் தனுஷை கட்டிப்பிடித்து அழுத சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

மேடையில் பேசிய கிரேஸ், “அசுரன் படத்தில் கென் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியபோது கருணாஸ் உடனே சம்மதித்தார். ஆனால், நான் சம்மதித்தால் தான் கென்னை படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்வேன் என்று வெற்றிமாறன் கூறினார். காரணம், அப்போது கென் 12ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். தேர்வுகள் பாதிக்கப்படுமோ என்ற கவலை எனக்கு இருந்தது” என்று கூறினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “பின்னர் நான் சம்மதித்ததும் கென் அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்தார். ஒருநாள் வெற்றிமாறனை சந்தித்து கென் எப்படி நடிக்கிறான் என்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஒரு நடிகன் நன்றாக நடிப்பது பெரிய விஷயமல்ல. அந்த கதாபாத்திரத்தை அவரை விட சிறப்பாக வேறு யாராலும் செய்ய முடியாது என்று சொல்லும் அளவுக்கு நடிக்க வேண்டும். தனுஷ் கென்னை தனது மகனாக நினைத்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கென் இன்னும் தனுஷை தனது அப்பாவாக நினைத்து நடிக்க ஆரம்பிக்கவில்லை. அதற்காக தான் நான் காத்திருக்கிறேன்’ என்று சொன்னார்” என்றார்.

மேலும், “தனுஷ் ஒரு யுனிவர்சிட்டி மாதிரி. அவருடன் இருந்தால் கென் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும் என்று வெற்றிமாறன் கூறினார். அதற்காக தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் நாங்கள் வாழ்நாள் முழுவதும் நன்றி கடன் பட்டிருக்கிறோம்” என்று கூறினார்.

இவ்வாறு உருக்கமாக பேசிய கிரேஸ் உணர்ச்சிவசப்பட்ட போது, மேடையில் இருந்த தனுஷ் அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். இந்த நெகிழ்ச்சியான தருணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களையும், சமூக வலைதளங்களில் ரசிகர்களையும் பெரிதும் நெகிழ வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karunas wife hugged Dhanush and cried Grace Karunas spoke passionately at the Youth music launch event


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->