பரந்தூர் விமான நிலையம் ரத்து...! சட்டசபையில் வெடித்த அமளி... வெளிநடப்பு செய்த தி.மு.க....! - Seithipunal
Seithipunal


பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்ததும், அவையில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது.

அறிவிப்பு வெளியான அடுத்த சில நொடிகளிலேயே தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பியதால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க தி.மு.க. உறுப்பினர்களுக்கு உடனடியாக பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.

ஆனால், அவர்களின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்தார்.முதலமைச்சர் விஜய் சட்டசபை விதி 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், அந்த அறிவிப்பு குறித்து உடனடியாக விவாதிக்க உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்க முடியாது என சபாநாயகர் விளக்கம் அளித்தார்.

இதனால் அதிருப்தியடைந்த தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பினர். அவையில் அமைதியை நிலைநாட்டும் வகையில், பேசுவதற்கு அனுமதி வழங்க முடியாத நிலையில் வெளியே சென்று தங்களது எதிர்ப்பை தெரிவிக்குமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார்.

இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளியேறும்போதும் அவர்கள், “அனுமதி கொடு... அனுமதி கொடு...” என முழக்கங்களை எழுப்பியபடியே சென்றனர்.

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக முதல்-அமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து, அதுகுறித்து தங்களது கருத்துகளை தெரிவிக்க தி.மு.க. உறுப்பினர்கள் வாய்ப்பு கோரிய நிலையில், அனுமதி மறுக்கப்பட்டதால் இந்த அமளி ஏற்பட்டது. இதனால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Paranthur Airport cancelled commotion broke out assembly DMK members walked out


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->