செப்டம்பர் 1 முதல் புதிய திரைப்படங்கள் வெளியிடமாட்டாது; தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு; காரணம் என்ன..?
The Producers Council has announced that no new films will be released from September 1st
வரும் செப்டம்பர் 1ந் தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியிடப்படாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களை 8 வாரம் கழித்து தான் ஓடிடியில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால் தான் அந்த படங்களை திரையரங்குகளில் திரையிட அனுமதிக்க முடியும் என்று தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு, தமிழ் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் இல்லாமல், தமிழ்நாட்டில் மட்டும் இந்த புதிய நடவடிக்கையை தன்னிச்சையாக புகுத்துவது கண்டிக்கத்தக்கது. இதை கண்டித்து வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்றும், திரைப்பட படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
The Producers Council has announced that no new films will be released from September 1st