அம்மாதான் என் வாழ்க்கையின் பெரிய தூண்; அப்பாவிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள தயக்கம்: ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்! - Seithipunal
Seithipunal


முதல்வர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜேசன் சஞ்சய் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தாய், தந்தை மற்றும் சகோதரி குறித்து அவர் பகிர்ந்துகொண்டுள்ள தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். சம்பத், ராஜூ சுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், தமன் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் முதலில் கடந்த மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதைத் தொடர்ந்து ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது ஆகஸ்ட் 28ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதால், ஜேசன் சஞ்சய் தீவிரமாக புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு அவர் இயல்பாகவும், வெளிப்படையாகவும் பேட்டி அளித்து வருகிறார்.

அந்த வகையில் தனது நடிப்பு மற்றும் திரைப்பட உருவாக்கம் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய், “எப்போதுமே படத்தில் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். அந்த ஜானர் அதற்கு ஒத்துழைத்தால், நான் யாராக இருக்கிறேனோ அந்த கேரக்டராகவே இயல்பாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். கேமராவுக்கு முன்பு மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறேனோ அப்படியே திரையிலும் காட்ட விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தனது குடும்பத்தைப் பற்றி பேசிய அவர், தனது தாயே தனது வாழ்க்கையின் மிகப்பெரிய தூண் என குறிப்பிட்டுள்ளார்.

“எனது வாழ்க்கையின் பெரிய தூணே எனது அம்மாதான். 24 மணி நேரமும் என்னைப் பற்றியும், எனது சகோதரியைப் பற்றியுமே நினைத்துக்கொண்டிருப்பார். நான் ஒருநாள் அவருக்கு ஃபோன் செய்ய மறந்துவிட்டால்கூட, அவரே எனக்கு ஃபோன் செய்து, இன்று என்ன நடந்தது, எப்படி இருக்கிறாய் என்றெல்லாம் கேட்டுக்கொண்டே இருப்பார்” என ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் தனது பெற்றோரிடம் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்துகொள்வதில் தனக்கு தயக்கம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

“எனது அப்பா, அம்மாவிடம் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள எனக்கு தயக்கமாகத்தான் இருக்கும். அவர்கள் அந்த அளவுக்கு எனக்கு இடம் கொடுக்கவில்லை. ஆனால் எனது சகோதரியிடம் மட்டும் என்னுடைய எல்லா விஷயங்களையும் மனம் திறந்து பேசுவேன்” என ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

ஜேசன் சஞ்சயின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, தனது தாயார் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசியிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

இதற்கிடையே விஜய் மற்றும் சங்கீதா தொடர்பான தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததாக கூறப்பட்ட வழக்கில் சங்கீதா தனது மனுவை வாபஸ் பெற்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனால் இருவரும் மீண்டும் இணையப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவானது.

ஆனால், ஆகஸ்ட் 15ஆம் தேதி விஜய் கொடியேற்றிய நிகழ்வில் சங்கீதா பங்கேற்காததும், திரிஷா பங்கேற்றதாக வெளியான காட்சிகளும் மீண்டும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தின. இதனால் விஜய்யின் குடும்ப வாழ்க்கை குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mom is the biggest pillar of my life I hesitate to share everything with Dad Jason Sanjay speaks openly


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->