அதிகாரிகளை வைத்து கொண்டு ஆட்சியா..? இடதுசாரிகளின் ஆதரவோடு ஆட்சி நடத்தப்போகிறீர்களா?; சிபிஎம் சண்முகம் கேள்வி..? - Seithipunal
Seithipunal


குஜிலியம்பாறை வட்டாட்சியர் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்தவர்களின் தகவல்களை திரட்டக் கோரி சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்கும் விதமாகவும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இந்த இரண்டு விவகாரங்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இரண்டு அறிவிப்புகளும் திரும்பப் பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முனைவர் எம்.சாய்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும்,  குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று சென்னை சைதாப்பேட்டையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கலந்துகொண்டு பேசியதாவது;

சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகியவற்றின் ஆதரவாலே இந்த அரசு நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர்களுக்கு இது தெரியாதா? என்று வினாவியுள்ளார்.  அத்துடன், இடதுசாரிகள் மீது இத்தகைய உள்நோக்கத்தோடு சுற்றறிக்கைகள் அனுப்பப்படுகின்றன என்றால், அதிகாரிகளை வைத்து கொண்டு ஆட்சி நடத்தப்போகிறீர்களா? இடதுசாரிகளின் ஆதரவோடு ஆட்சி நடத்தப்போகிறீர்களா? என தவெக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலேயும், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சாய்குமார் ஐ.ஏ.எஸ்.க்கு எதற்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்? என்றும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். உயர்க் கல்வி ஆணையருக்கு எப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதோ, அதேபோல் சாய்குமார் ஐ.ஏ.எஸ்.க்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CPMs Shanmugam asked whether they are running the government by employing officials


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->