“தமிழ் படங்களையும் பாடல்களையும் ரசிக்கத் தெரிய வேண்டும்”!ஜேசன் சஞ்சய்க்கு இப்படிப்பட்ட லவ்வர் தான் வேண்டுமாம்
One must know how to appreciate Tamil movies and songs apparently this is the kind of girlfriend Jason Sanjay wants
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், நடிகராக அல்லாமல் இயக்குநராக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அவர் இயக்கியுள்ள முதல் படமான **‘சிக்மா’**வில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆக்ஷன், காமெடி, ஹெய்ஸ்ட், அட்வென்ச்சர் உள்ளிட்ட அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் தீவிரமாக புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஜேசன் சஞ்சய்யும் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். படத்தைப் பற்றிய தகவல்களுடன் தனது தனிப்பட்ட விருப்பங்கள் குறித்தும் அவர் பேசி வருவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது காதலி எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும், என்னென்ன விஷயங்கள் பிடிக்கும், எது பிடிக்காது என்று ஜேசன் சஞ்சய்யிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “எனது லவ்வர் உணவை மிகவும் விரும்புபவராக இருக்க வேண்டும். என்னைப் போலவே அட்வெஞ்சரஸாகவும், புதுப்புது இடங்களுக்குச் சென்று புதிய விஷயங்களை எக்ஸ்ப்ளோர் செய்ய விரும்புபவராகவும் இருக்க வேண்டும். அதேபோல் பொருளாதார ரீதியாக சுயமாக இருப்பவராக இருக்க வேண்டும்” என்று கூறினார்.
அதே நேரத்தில், அதிகமாக ‘ஹை மெயின்டனன்ஸ்’ கொண்டவராக இருக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், “தமிழ் படங்களையும் தமிழ் பாடல்களையும் பார்க்காமலும் கேட்காமலும் இருப்பது மிகப்பெரிய ரெட் ஃபிளாக். ஏனென்றால் நான் எப்போதும் திரைப்படங்களில் இருந்து ரெஃபரன்ஸ்களையும் கவுண்டர்களையும் கொடுத்துக்கொண்டே இருப்பேன். அதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் அந்த வைபே இருக்காது” என்று ஜேசன் சஞ்சய் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, தனது முன்னுரிமைகளையும் வாழ்க்கை முறையையும் புரிந்துகொள்ளக்கூடியவராக இருக்க வேண்டும் என்றும், அதனை புரிந்துகொள்ளாமல் இருக்கும் ஒருவருக்காக தன்னை மாற்றிக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.
‘சிக்மா’ படத்தின் புரமோஷன் பேட்டியில் ஜேசன் சஞ்சய் தனது காதலி குறித்த எதிர்பார்ப்புகளை இவ்வளவு வெளிப்படையாக பகிர்ந்திருப்பது தற்போது ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
One must know how to appreciate Tamil movies and songs apparently this is the kind of girlfriend Jason Sanjay wants