“இன்னும் 2 ஆண்டுகளில் திமுக அரசியலை விட்டு விலகும்; அண்ணா அறிவாலயம் வாடகைக்கு விடப்படும்” – அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்ற தவெக அரசின் 100 நாள் ஆட்சி சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

கூட்டத்தில் பேசிய அவர், “40 ஆண்டுகளாக சோழவந்தான் தொகுதியை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை இந்த தொகுதியில் இருந்த எம்எல்ஏக்கள், அமைச்சர்களை மக்கள் பார்த்திருப்பார்களா? பணத்தைக் கொடுத்து வெற்றி பெற்ற பிறகு அவர்கள் தொகுதியை விட்டு காணாமல் போய்விடுவார்கள். இனி அப்படி இருக்காது. மக்களுக்கான நல்ல மாற்றத்தை உருவாக்குவோம்” என்றார்.

மேலும் திமுக ஆட்சியில் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்படும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது ஆதாரங்களுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்த சிடிஆர் நிர்மல்குமார், “எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் திமுகவை தீய சக்தி என்று விமர்சித்தனர். அந்த வகையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் திமுகவை முற்றிலுமாக ஒழித்துவிட்டார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுகவினர் அரசியலை விட்டு விலகும் நிலை ஏற்படும். அண்ணா அறிவாலயத்தை வெள்ளையடித்து வாடகைக்கு விட வேண்டிய சூழல் வரும்” என்று பேசினார்.

மேலும் முரசொலி அறக்கட்டளையை யார் கைப்பற்றுவது என்பதில் திமுக குடும்பத்துக்குள் போட்டி நிலவுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அமைச்சரின் இந்த கடுமையான விமர்சனங்கள் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In another two years the DMK will exit politics Anna Arivalayam will be rented out Minister CTR Nirmal Kumar


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->