''பல வருடங்களை கடந்த உறவு; அதிர்ச்சி தரும் நிகழ்வை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலை''; சௌகார் ஜானகி மறைவுக்கு பி.சுசீலா இரங்கல்..! - Seithipunal
Seithipunal


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வந்த பிரபல பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு பாடகி பி.சுசீலா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பி.சுசீலா வெளியிட்ட இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

''என் இனிய தோழி சவுகார் ஜானகியின் மறைவை  கேள்வி பட்டு அதிர்ச்சி அடைந்தேன்.  எங்கள் உறவு பல வருடங்களை கடந்த உறவு. சினிமாவைத் தாண்டி  எங்கள் உறவு நீடித்தது. முக்கியமாக ஸ்ரீ சத்யா சாய் பாபாவின் பக்தைகளாக  திகழ்ந்த போது பாபா தொடர்புள்ள விழாக்களில் இணைந்து பணியாற்றியது ஒரு பாக்கியம்.

என் மனம்,  இந்த அதிர்ச்சி தரும் நிகழ்வை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இந்த பதிவின் வாயிலாக அவர்களின் குடும்பத்தினருக்கு  என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக்கொண்டு  அவரின் ஆன்மா இறைவனடியைச் சேருமாறு இறைவனை பிரார்த்திக்கிறேன்.'' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

P Susheela condoles the death of Sowcar Janaki


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->