திமுக பரப்பிய வதந்திகளால் மக்கள் பீதியடைந்து உள்ளனர் - வெளுத்து வாங்கிய அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக அரசின் நிர்வாகத் தோல்விகள் மற்றும் வரவிருக்கும் தேர்தல் மாற்றங்கள் குறித்து அனல் பறக்கப் பேசினார்.

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு:
விளாத்திகுளம் சிறுமி மரணத்தில் காவல்துறையின் அலட்சியத்தை மிகக்கடுமையாகச் சாடினார். "பெற்றோரின் புகாரைப் புறக்கணிக்காமல் போலீசார் துரிதமாகச் செயல்பட்டிருந்தால் அந்தச் சிறுமியைக் காப்பாற்றியிருக்கலாம். இதற்கு முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டு குற்றப் புள்ளிவிவரம்:
கொலைகள் 8,008 
பாலியல் குற்றங்கள் 2,080 
போக்சோ வழக்குகள் 39,999 

எரிபொருள் 'அரசியல்':
"உலகப்போர் சூழலிலும் இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால், திமுக பரப்பிய வதந்திகளால் மக்கள் பீதியடைந்து பெட்ரோல் பங்குகளில் தவம் கிடக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமே இந்த அவலநிலை உள்ளது" எனக் குறிப்பிட்டார்.

திமுக கூட்டணியில் பெரிய மாற்றங்கள் வரும் என கணித்த அண்ணாமலை: அதிருப்தியில் தோழமை: "வைகோ வெறும் 4 இடங்களைப் பெற்றுவிட்டு கஷ்டப்பட்டுச் சிரிக்கிறார். காங்கிரஸிற்கு மட்டும் கூடுதல் இடங்கள் தருவதை சிபிஐ ஏற்கவில்லை. விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விரைவில் கூட்டணியை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

பொது எதிரி: "பொது எதிரியை (திமுக) வீழ்த்தத் தேர்தலுக்கு முன் பல திருப்பங்கள் ஏற்படும். அதிமுக - பாஜக தொண்டர்கள் களத்தில் சுறுசுறுப்பாக உள்ளனர்" என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->