சூர்யா 46: ‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’ டீஸர் வெளியீட்டு தேதி அறிவிப்பு ...! - ரசிகர்கள் உற்சாகம் - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 46வது திரைப்படமான 'விஸ்வநாத் அன்ட் சன்ஸ்' மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். சூர்யாவுடன் மமிதா பைஜூ, ரவீனா டான்டன், பவானி ஸ்ரீ, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் நாக வம்சி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை நிமிஷ் ரவி கவனிக்க, படத்தொகுப்பை நவீன் நூலி மேற்கொள்கிறார்.

மேலும், 2005ஆம் ஆண்டு வெளியான கஜினி படத்தில் சூர்யா நடித்த சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தைப் போலவே, இந்தப் படத்திலும் வலுவான மற்றும் நினைவில் நிற்கும் கதாபாத்திரத்தில் அவர் தோன்றுவார் என இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார்.

தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த திரைப்படம் வரும் ஜூலை மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ரசிகர்களின் ஆவலை மேலும் தூண்டும் வகையில், ‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’ படத்தின் டீஸர் மார்ச் 16ஆம் தேதி மாலை 4.06 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Suriya 46 Viswanat and Sons Teaser Release Date Announced Fans Excited


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->