'டோரதி' படம் சமூக கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்; டோரதி படக் குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டிய அமைச்சர் வன்னி அரசு ..!
Minister Vanni Arasu personally invited and appreciated the Dorothy film crew
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'டோரதி' படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இருப்பினும் இந்த படக் குழுவினரை தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு நேரில் அழைத்துப் பாராட்டினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று, புதன்கிழமை தலைமைச் செயலகத்திற்கு நடந்த இந்த சந்திப்பின்போது, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
அதன் பின்னர் பேட்டியளித்த அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது:
''நேற்றுதான் 'டோரதி' படம் பார்த்தேன். படக்குழுவை நேரில் அழைத்து பாராட்ட வேண்டும் என்று இன்றைய தினம் பாராட்டினேன். 'டோரதி' படம் சமூக கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சாதிய கட்டமைப்பை உடைக்க வேண்டும் என்று இயக்குநர்கள் நிறைய பேர் வந்துள்ளது மகிழ்ச்சி. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு வாழ்த்துகள்.
பெண்கள் பலவீனமாக இருப்பதாக சமூகக் கட்டமைப்பு உள்ளது. திருநங்கைகள் எப்படி புறக்கணிப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள் என பார்க்கிறோம். திருநங்கைகள் மனித சமூகத்தில் ஒரு அங்கம் என அங்கீகாரம் செய்யப்படவில்லை. டோரதி திரைப்படம் திருநங்கையருக்கான புதிய மலர்வை உருவாக்கி உள்ளது. இது போன்ற படைப்புகள் நிறைய வர வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அளித்த பேட்டியில் கூறியதாவது;
''மக்கள் 'டோரதி' படத்தை திரையரங்கில் கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள். சமூகத்தில் சிறிய மாற்றம் உருவாகி உள்ளது என்று மக்கள் சொன்னார்கள். இப்போது அமைச்சர் வன்னி அரசு பாராட்டியது மகிழ்ச்சி என்றார்.
அப்போது 'டோரதி' திரைப்படத்திற்கு விமர்சனமும் எதிர்ப்புகளும் வருகிறது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எலிப்பினார். அதற்கு ''சமூகக் கட்டமைப்பில் சீர்திருத்தம் செய்ய நினைத்தால் எதிர்ப்பு வரத்தான் செய்யும்.'' என்று குறிப்பிட்டார்.
English Summary
Minister Vanni Arasu personally invited and appreciated the Dorothy film crew